நடிகை கஜோல் வாங்கியுள்ள புதிய RR கார் - விலையை கேட்டால் ககிறுகிறுன்னு வந்துடும்..!


பாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள். 


திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களிலும், விளம்பரங்ளகளிலும் நடித்து கல்லா கட்டி வருகின்றது இந்த நட்சத்திர ஜோடி. இந்நிலையில், இவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்திய சினிமா பிரபலங்களில் வெகு சிலரிடமே இந்த நிறுவனத்தின் கார் இருக்கிறது. 


இப்போதும், இவர்களும் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். ஆம், இந்திய மதிப்பில் 6.95 கோடி மதிப்புள்ள 'Rolls Royce Cullinan 2019" காரை சொந்தமாக்கி கொண்டிருக்கிறார் கஜோல்-அஜய் தேவ் கான் ஜோடி. இந்த கார் லிட்டருக்கு 5 முதல் 7 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் தரக்கூடிய ஒன்று.

ஐந்து பேர் மட்டுமே அமரக்கூடிய SUV ரக காரான இதன் சிறப்பம்சமே இதனுடைய ஷாக் அப்சர்பர்கள் தான். ஒரு அடி உயரமுள்ள ஸ்பீட் ப்ரேக்கர்களில் வண்டியை ஏற்றினால் கூட உள்ளே அமர்திருப்பவர்களுக்கு நேரான சாலையில் செல்வது போன்ற உணர்வு தான் வரும். 

மேலும், கார் சென்றுகொண்டிருக்கும் போது உள்ளே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு, எஞ்சின் மற்றும் ஆபியன்ஸ் சவுன்ட் ப்ரூஃப் வசதி இந்த காரில் உள்ளது.
Previous Post Next Post