அந்த படத்தின் 2-ம் பாகம் - அஜித்தின் அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன் - முன்னணி இயக்குனர் விருப்பம்


நடிகர் அஜித், நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி ஆகியோரை வைத்து, செண்டிமெண்ட் மற்றும் த்ரில்லர் படமான என்னை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன் . 

இந்தப் படத்தில் அழகான காதலையும் அற்புதமாக சொல்லி இருந்தார். பெரிய அளவில் இந்தப் படம் வசூலை ஈட்டித் தராவிட்டாலும், சராசரியாக இந்தப் படம் ஓடியது. 


இதையடுத்து, மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து, கௌதம் வாசுதேவ் மேனன் படம் இயக்கப் போகிறார் என வெகுகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அது நடக்கவில்லை. 


இந்நிலையில், இது குறித்து, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது, நடிகர் அஜித்தை வைத்து, என்னை அறிந்தால் படம் இயக்கியது வித்தியாசமான அனுபவம். என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடியாக இருக்கிறது. 

அந்த படத்தை எப்போது எடுக்கலாம் என அஜித் சொன்னால் போதும் என்னை அறிந்தால் 2 சூட்டிங்கிற்கு கிளம்பி விடுவேன். நடிகர் அஜித்தின் அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.