நடிகர் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது.
இந்த படத்தை அஜித் மற்றும் வினோத் இருவரும் ஒருவித கட்டாயத்துடன் தான் உருவாகினார்கள். ஆனாலும், தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததற்கு பலனாக படம் ஹிட் அடித்தது.
இந்நிலையில், தல 60 படத்திற்கு தனது சொந்த கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் வினோத். நேர்கொண்ட பார்வைக்கு பிறகு உங்கள் கதையில் நடிக்கிறேன் என்று அஜித் வாக்குறுதி கொடுத்ததன் பேரிலேயே வினோத் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி கொடுத்தார்.
அதன் படி, தல60 படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் படப்படிப்பு சத்தமே இல்லாமல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.aஅஜித் வெள்ளை டீசர்ட் மற்றும் காக்கி பேண்டுடன் கொல மாஸாக நிற்கிறார். இதன் மூலம் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.