தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் வேறு யாரும் அல்ல, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் மைத்துனர் தான்.
இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்த படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக யூட்யூப் பிரபலம் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சற்றுமுன் தளபதி 64 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை விஜய் ரசிகர்கள் தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவிருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.



