உதயநிதிக்கு ஜோடியாகும் "பேட்ட" பட நடிகை..!


அரசியல் வாரிசான உதயநிதி நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய பட பேட்ட பட நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மற்றும் தி.மு.க இளைஞர் அணி செயலாளாளர் என்ற பொறுப்பிலும் உள்ளார் உதயநிதி.இவர் இரெட் செயன்டு மூவிசு என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். 

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்துள்ள ஐந்து பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அடுத்து வரப்போவது நம்ம ஆட்சி தான். அதனால், சீக்கிரம் போய் அடகு வைங்க என்று பேசியது எல்லாம் உச்ச கட்டம். 

2021-ல் எப்படியும் ஆட்சியை பிடித்து விடுவது என குறிக்கோளுடன் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இது ஒருபுறமிருக்க, சினிமாவிலும் தனது பயணத்தை தொடர்கிறார். தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பேட்ட படத்தில் நடித்த இளம் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கவுள்ளார். 

கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியவர். அந்த படத்தின் தாமதத்தால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த ரஜினியின் ‘பேட்ட’ படமே இவருக்கு தமிழில் அறிமுக படமானது. 

அதன் பின்னர், சிம்புவின் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மேகா ஆகாஷ், ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தின் மூலம் இந்தியிலும் தடம் பதிக்கவுள்ளார். இப்போது, தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Advertisement