"உங்கள இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு அண்ணாமல" - வைரலாகும் தர்பார் ரஜினியின் புகைப்படம் - ரசிகர்கள் வியப்பு


இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் "பேட்ட" திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபின் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். 

இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மற்றும் யோகிபாபு உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. 


ஏறக்குறைய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி வந்தது. 


இதுவரை 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் முருகதாஸும், ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இதில் மிகவும் இளமையாக இருக்கும் ரஜினியை பார்த்த ரசிகர்கள். உங்கள இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு அண்ணாமல என்று வியந்து வருகிறார்கள்..