Posts

Showing posts with the label Darbar Tamil Movie

தர்பார் படம் தோல்வி - தலைவர் 168 சூட்டிங்கில் பிரச்சனை - ரஜினியை சுற்றிய அரசியல் கழுகுகள் - ஒரு அலசல்

Image
ஏம்பா.. தர்பார் படம் ப்ளாப்-ஆகிடுச்சாமே..டிஸ்ட்ரிப்யூடர் எல்லாம் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நிக்குறாங்களாமே.. ப்ரொட்யூசர் தலையில துண்ட போட்டுட்டாங்களாமே.. இப்படிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் உலா வந்துகொண்டிருகின்றன. இன்னும் வரும். ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத கபாலி படத்தை ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. 700 கோடி என்ற அண்டப்புழுகு புழுகிய அதே ஊடகங்கள் தான் இப்போது தர்பார் படத்தை பிளாப், ரஜினி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை என கூறிக்கொண்டிருகின்றன. தர்பார் படம் வெளியான நாள் முதல் இடையில் ஒரே ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை. படம் வெளியான முதல் மூன்று நாட்களும் 80% அரங்கம் நிறைந்த காட்சிகள். அடுத்தடுத்த நாட்களில் 60%க்கும் குறையாமல் அரங்குநிறைந்த காட்சிகள். போட்டிக்கு எந்த படமும் இல்லை. தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படமும் ஐந்து நாட்கள் கழித்து தான் ரிலீஸ் ஆனது. இதில், எங்கே இருந்து வந்தது வியாபார நட்டம் என தியேட்டருக்கு வெளியே டீக்கடை வைதிருப்பவர் கூட கூறுவார். எங்கயோ.. இடிக்குதே என உங்களுக்கு பொறி தட்டினால் ...

தர்பார் vs பட்டாஸ் : மாமனார் மருமகன் வசூல் வேட்டை - மாஸ் வசூல் விபரம்..!

Image
2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியான இரண்டு புதிய படங்கள் தர்பார், பட்டாஸ். இந்த இரண்டுமே ஒரே வீட்டு பிரபலங்களின் படங்கள் மாமனார், மருமகன் என 2020 பொங்கல் பணடிகையை ஆக்கிரமித்து விட்டனர். அவர்களது குடும்பத்தை தாண்டி அவரது ரசிகர்கள் இப்படங்களை தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். தர்பார் படம் 9 நாட்களிலும், தனுஷின் பட்டாஸ் 3 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன. ஆனாலும் போட்டிக்கு என்ற படமும் இல்லாததால் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சரி, இப்போது சென்னையில் மட்டும் இப்படங்களின் இதுவரையிலான வசூல் விவரத்தை பார்ப்போம்.     தர்பார்- ரூ. 11.85 கோடி ( 9 நாள் முடிவில் )     பட்டாஸ்- ரூ. 1.41 கோடி ( 3 நாள் முடிவில் ) பொதுவாகவே, ஒரு படம் சென்னையில் என்ன வசூல் செய்கிறதோ அதனை பத்தால் பெருக்கினால் என்ன தொகை வருகிறதோ அதுவே ஒட்டு மொத்த தமிழகத்தில் வசூல் என்பது எழுதப்படாத விதி. அந்த விதி தர்பார் விஷயத்திலும் நிருபிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் 113 கோடி ரூபாயை ஒன்பது நாளில் வசூல் செய்துள்ளது...

"தர்பார்" - ஐந்து நாள் வசூல் இவ்வளவு தான் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்...!

Image
பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகியுள்ளது ரஜினியின் தர்பார் படம். சென்ற வியாழக்கிழமை ரிலீஸ் ஆன இந்த படம் வசூல் குவித்து வருகிறது.  ஆனால், ரசிகர்கள் சிலர் இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து விட்டது என போலியான தகவல் ஒன்றை பரப்பி வந்தனர். ஆனால், நம்முடைய தளத்தில் உண்மையான வசூல் என்ன என்பதை பதிவு செய்திருந்தோம். Check This : தர்பார் முதல் நாள் வசூல் ரிப்போர்ட் இந்நிலையில், படத்தை தயாரித்த லைகா நிறுவனமே முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 150 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.  இந்நிலையில், தற்போது ஐந்தாம் நாளான நேற்று திங்கட்கிழமை பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. திங்கட்கிழமை சென்னை பகுதியில் 86 லட்சம் வசூலித்துள்ளது தர்பார்.  இதன் மூலம் ஐந்து நாட்களில் சென்னையில் மட்டும் வசூல் 8 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. உலகம் முழுதும் 173 கோடி ரூபாயை ஐந்து நாளில் வசூல் செய்துள்ளது தர்பார்.  மேலும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் "தர்பார்" வசூல் மழையில் நனையும் ப...

"தர்பார்" சறுக்கியதா ..? - நான்கு நாள் முடிவில் வசூல் நிலவரம்..!

Image
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி முதன்முறையாக நடித்திருக்கும் படம் தர்பார். போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கும்  இப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலில் கிளப்பி வருகிறது.  சென்னையில் முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்த "தர்பார்" இரண்டாம் நாளில் வசூல் குறைந்தது. தற்போது, படம் 4 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே மொத்தமாக ரூ. 7.28 கோடி வசூலித்துள்ளது.  நாளை முதல் பொங்கல் விடுமுறை என்பதா இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.

இது என்ன புது வம்பு.!? - தர்பார் ரஜினிகாந்த் மீது ராணுவ வீரர் வழக்கு - இதுக்கெல்லாமா கேஸ் போடுவாங்க..???

Image
தர்பார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் திணறி வருகின்றனர். படம் வெளியான நாளிலேயே பிரபல அரசியல் பிமுகர் சசிகலா-வை மறைமுகமாக தாக்கியுள்ளார் என்று சர்ச்சைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ரஜினிகாந்த் மீதும் இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைதொடுத்துள்ளார். அந்த வழக்கின் மனுவில், தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார். ஆனால, ஹிப்பி தலைமுடி மற்றும் சவரம் செய்யாத முகத்துடன் நடித்துபோலீஸ் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளார்.  மேலும் நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று பேசும் வசனம், போலீஸ் மற்றும் ராணுவத்தினரை கொச்சைபடுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்தப் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் இப்படியெல்லாமா வழக்கு போடுவார்க...

சும்மா கிழி..! - தர்பார் - இரண்டு நாள் மாஸ் வசூல் சாதனை - அதிர்ந்து கிடக்கும் கோலிவுட் வட்டாரங்கள்..!

Image
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  நேற்று (ஜனவரி 9) வெளியான இந்தப் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  வசூல் ரீதியாக இந்தப் படம் தமிழகத்தில் எப்படி என்ற முழுமையான விவரம் நேற்று மாலை (ஜனவரி 10) வெளியானது. முன்னதாக, முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்தப் படம் 2.27 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  சென்னையில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் ரஜினி நடித்த '2.0' முதல் இடத்தில் இருக்கிறது. முதல் நாளில் 2.64 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த 'சர்கார்' படம் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்து 2-ம் இடத்தில் இருக்கிறது. சர்கார் படத்தை விட 10 லட்சம் ரூபாய் குறைவ...

"தர்பார்" வசனம் நீக்கப்பட்டது குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிரடி..!

Image
லைகா நிறுவனம் தயாரித்த "தர்பார்" திரைப்படம் கடந்த 9-ம்தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் மழையில் நனைந்து கொண்டிருகின்றது. இந்த படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் சசிகலா-வை குறிப்பிட்டு தாக்குவது போல ஜெயிலில் இருந்து ஷாப்பிங்-லாம் போய்ட்டு வராங்க என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த வசனம் இடம் பெற்ற காட்சியின் போது பல திரையரங்கில் இருந்த சில ரசிகர்கள் "சசிகலா.." என்று கத்தினார்கள். இது, சசிகாவின் வழக்கறிஞரின் காதுகளுக்கு செல்ல, வசனத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூயிருந்தார். இந்நிலையில், அந்த வசனம் நீக்கப்படுவதாக பட்டத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் தான் இந்தியன் 2 படத்தையும் தயாரித்து வருகின்றது. இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பராசக்தி காலத்தில் இருந்தே கருத்து சுதந்திரத்திற்கு பிரச்சனை உள்ளது. தர்பார் படத்தில் வசனம் நீக்கப்பட்டது கூட ஒருவகை ஷாப்பிங் தான்...

தர்பார் - உலகம் முழுதும் முதல் நாள் வசூல் விபரம் - அதிர்ந்து கிடக்கும் கோலிவுட்.!

Image
இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினி ஆகியோர் முதன் முறையாக இணைந்த படம் "தர்பார்". இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியுள்ளார்.  நிஜமாகவே இவருக்கு 70 வயசா என கேட்க தோனுகிறது இவரது நடிப்பும் ஸ்டைலும். விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் படத்தின் வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் அதிகம் வசூலிக்கும் என்கின்றனர்.  வரும் நாட்களின் பொங்கல் விடுமுறை வேறு வருகிறது, பலருக்கும் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் அரிய அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது விவரங்கள் இதோ, சென்னை- ரூ. 2.27 கோடி  USA- $615K  நியூசிலாந்து- $16,500  ஆஸ்திரேலியா- $160,000  ஹைதராபாத்- ரூ. 12.05 லட்சம் இப்படி சில இடங்களின் விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் சினிமா டிராக்கர்கள் மத்தியில் படம் ரூ. 55 கோடிக்கு மேல் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள்.

தர்பார் படம் எப்படி இருக்கு..? - ஒரே ஒரு வார்த்தை கூறிவிட்டு ஓட்டம் பிடித்த சிம்பு..!

Image
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகர் ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகிவிட்டது. வழக்கம் போல் பட கதை என்ன, ரஜினி எப்படி நடித்துள்ளார் என விமர்சனங்கள் எல்லாம் வந்துவிட்டது.  ரஜினி ரசிகர்கள் அவரது தலைவரை கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிலேயே தர்பார் படத்தை பார்த்துள்ளனர்.  அந்த வகையில், நடிகர் சிம்புவும், தர்பார் படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்த்துள்ளார். படம் முடிந்து வெளியே வந்த அவரிடம் பத்திரிக்கையாளர்கள் படம் எப்படி இருக்கு சொல்லுங்க என்று கேட்டதற்கு "சூப்பர்மா.. சூப்பர்மா..!" என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டு காரில் ஏறி  ஓட்டம் பிடித்தார் சிம்பு.

சசிகலா, சீமான், ஊடகங்கள் என "தர்பார்" படத்தில் ஒன் பை ஒன்னாக போட்டுதாக்கிய ரஜினிகாந்த்..!

Image
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினியின் ஸ்டைல், சேட்டை, யோகி பாபுவின் காமெடி என பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அரசியலில் என்ட்ரியாகவுள்ள ரஜினி இந்த படத்தில் சில அரசியல் புள்ளிகளையும், பணம் வாங்கி கொண்டு 24 மணி நேரமும் ஒரு கட்சிக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் ஊடகங்களையும் வச்சி செய்துள்ளார். கைதி ஆள் மாறாட்டம் பற்றி பேசும் ஒரு காட்சியில் தென்னிந்தியாவில் கூட ஒருத்தர் ஷாப்பிங்-லாம் போய்ட்டு வர வீடியோவை நாங்க பாத்தோம் என்று ஒரு அதிகாரி கூறுவது போன்ற காட்சி சசிகலாவை தாக்கியுள்ளது. மேலும், மும்பைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் போதுமும்பையில் இருக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் நாங்களும் தமிழ்நாடுதான் சார் என்று கூறுவார்கள். அதற்கு ரஜினி, எனக்கும் கிருஷ்ணகிரி நாச்சிகுப்பம் தான் என்று கூறுவார். இதன் மூலம் ரஜினியை தமிழரே அல்ல என்று கூறி வரும் சீமானை ஒரு தாக்கு தாக்கியுள்ளார். அதன் பிறகு, முக்கியமாக ஒருதலை பட்சமாக செயல்படும் ஊடகங்களை போட்டு தாக்கும் படி ஒரு காட்சியில் இந்த தொலைக்காட்சி சேன...

தடுமாறும் தர்பார் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியதா..? - என்ன ஆச்சு முருகதாஸிற்கு..?

Image
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த நடிகர் ரஜினி, இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால், இது எந்த விதத்திலும் படத்தின் வசூலை பாதிக்காது என்று கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர். காரணம், படம் வெளியான முதல் நாளான இன்று மட்டும் உலகம் முழுதும் 80 கோடி வசூல் என்ற இலக்கை எட்டியுள்ளது தர்பார். படத்தில், ஆதித்யா அருணாச்சலமாக வரும் ரஜினிகாந்த் மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார்.  போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுகிறார் ஆதித்யா அருணாச்சலம். பெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை என்பவரை கைது செய்கிறார். ஆனால், ஆள் மாறாட்டம் மூலம் அஜய் மல்ஹோத்ரா ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். ஆனால், அதற்கு உதவிய சில அதிகாரிகளை வைத்தே அஜய் மல்ஹோத்ராவை முடித்து கட்டும் விதம் வேற லெவல். ...

தர்பார் படத்தில் மீண்டும் அஜித்தை சீண்டிய ரஜினி - இதெல்லாம் தேவையா..? - கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!

Image
கடந்த வருடம் பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வந்து இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.  இந்த படங்களின் ட்ரெய்லர்கள் வெளியான போது இருந்த கிரேஸி லெவல் என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும். பேட்ட படத்தின் ட்ரெய்லரில் எவனுக்காச்சும்.. பொண்டாட்டி.. கொழந்த..குட்டி.. சென்டிமென்ட் கிண்டிமென்ட்ன்னு இருந்தா அப்டியே ஓடி போயிடு.. கொல காண்டுல இருக்கேன். மவனே.. கொல்லாம விடமாட்டேன் என்று ஒரு வசனத்தை பேசியிருப்பார்.  இது விஸ்வாசம் அஜித்தை தான் தாக்குகிறார் என்று கூறினார்கள். காரணம், இந்த படம் வெளியாகும் முன்பே அப்பா-மகள் செண்டிமென்ட் படம் என்று சிறுத்தை சிவா கூறியிருந்தார். அதனை வைத்து தான்.. பொண்டாட்டி.. கொழந்த குட்டி.. செண்டிமென்ட் இருந்தா ஓடிபோயிடு என்று வசனத்தை பேட்ட படத்தில் வைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் கூறினார்கள். அதற்கு அடுத்தபடியாக வந்த விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் தான் பரபரப்பை பற்ற வைத்து ரசிகர்களின் கிரேஸி லெவலை எகிற வைத்தது. விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரில் நடிகர் அஜித் "பேரு தூக்கு துரை தேனி மாவட்டம், ஊரு கொ...

"தர்பார்"- படம் எப்படி இருக்கு..? - திரை விமர்சனம்..!

Image
டெல்லியில் யாருக்கும் அஞ்சாத தனிக்காட்டு ராஜாவாகஅட்டூழியம் செய்யும் ரவுடிகளை என்கவுண்டர் என்ற பெயரில் போட்டு தள்ளும் போலீஸ் தான் ரஜினி. முருகதாஸ் படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை எதுவும் இருக்காது.  இந்தபடம் அதற்கு விதி விலக்கல்ல, ஹீரோயின் என்று செல்வதற்கு ஒருவராக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.  மொத்த படத்தையும் தன் தோல் மேல் தூக்கி வைத்துக்கொண்டார் ரஜினி. விறுவிறுப்பாக செல்லும் முதல் பாகம். எமோஷனல், சண்டை என நகரும் இரண்டாம் பாதி. மனதை நெருடும் க்ளைமாக்ஸ் என முடிகின்றது படம். டெல்லியில் இருந்து மும்பைக்கு மாற்றப்படும் போலீஸ் ரஜினி. மும்பைக்கு வந்த அடுத்த நாளே ஒட்டுமொத்த மும்பையையும் ஆட்டிப்படைக்கும் சில முக்கிய புள்ளிகளை அலேக்காக தூக்குகிறார்.  அதில், தொழிலதிபர் ஒருவரின் மகனும் அடக்கம். ஒரு கட்டத்தில் தன்னுடைய பவரை பயன்படுத்தி தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகிறார் தொழிலதிபர்.  ஆனால், விடுவாரா நம்ம ஆதித்ய அருணாச்சலம்.பக்கவாக ப்ளான் போட்டு தொழிலதிபரின் மகனை போட்டு தள்ளி ...

"லாஜிக்கே இல்லை.. - பழைய மசாலா..- பாட்ஷா 2..- வேற லெவல் ." - "தர்பார்" படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க? - வாங்க பாக்கலாம்..!

Image
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து நள்ளிரவு முதலே படம் வெளியாகும் திரையரங்கு முன் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அதிகாலை 4 படம் திரையிடப்பட்டது.  திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைதொடர்ந்து, எந்ததடங்களும் இல்லாமல் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?- வாங்க பாக்கலாம்..! As a #Thalaivar fan really disappointed with #Darbar .. 😭😭 Illogical and predictable scenes. Please Thalaiva don't do any movie with shit director 🙏🙏🙏 BGM and Chumma kizhi is worth. Nothing new. Old masal...

தலைவன்.. வேற ரகம் - சற்று முன் வெளியான தர்பார் படத்தின் மாஸான ப்ரோமோ..!

Image
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் நாளை (ஜனவரி 9-ம் தேதி) ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் திரையிடப்பட உள்ளது.  இந்நிலையில் தர்பார் படம் ரிலீஸான உடனே அது தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடும் என்ற அச்சம் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் பேட்ட படத்தை ரிலீஸான சில மணிநேரத்தில் ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.  இந்நிலையில் தர்பார் படத்தையும் சூட்டோடு சூடாக தமிழ் ராக்கர்ஸ் கசியவிடும் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. தர்பார் தமிழ் ராக்கர்ஸில் கசிந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.  மேலும், படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நடிகர் ரஜினியின் அண்ணாமலை படத்தின் தீம் மியூசிக்கை மெருகேற்றி பயன்பட...

போலீச Left-ல வச்சிக்கோ.. Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத - பொளந்து கட்டும் தர்பார் ட்ரெய்லர் - வீடியோ

Image
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.  இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று ட்ரெய்லர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.  ஆனால் தர்பார் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று முருகதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனால் சீக்கிரம் மாலை வராதா, ட்ரெய்லர் வெளியாகாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இந்த முறையும் ஏமாற்றம் தான். மணி 6:30-ஐ தாண்டியும் இன்னும் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால், பயங்கர கடுப்பில் படத்தயாரிப்பு நிறுவனத்தை கழுவி ஊத்தி வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில், சற்று முன்பு செம்ம மாஸான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

உங்கள் வீட்டுக்கு வந்தால் நான் தான் சமைப்பேன் - உங்களுக்கு ஓ.கே-வா..? - நடிகையின் கேள்விக்கு ரஜினியின் ரியாக்ஷன்

Image
‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.  ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இசைவெளியீட்டு விழாவின் போது லைகா நிறுவனத்தின் சாதனைகளை விளக்கும் விதமாக ஸ்பெஷல் வீடியோ ஒன்று ஒளிபரப்பபட்டது. அதில் லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. விழாவில் பேசிய நடிகை நிவேதா தாமஸ், இந்த படத்தில் ரஜினி சார்க்கு மகளாக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பு கிடைக்கும் என கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி சார் முகம் சுளிக்கவில்லை. அவ்வளவு எனர்ஜி அவருக்கு.  ...

அஜித்திற்கு "தல" என பெயர் வைத்ததே அவரு தான் - தர்பார் மேடையில் போட்டு உடைத்த முருகதாஸ்..!

Image
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இருவாகியுள்ள "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து வருகிறது.  படத்தில் பணியாற்றிய பலரும் ரஜினி பற்றி தொடர்ந்து பல விஷயங்களை மேடையில் பேசி வருகின்றனர்.  இயக்குனர் முருகதாஸ் பேசும்போது தான் எவ்வளவு தீவிர ரஜினி ரசிகர் என கூறிவிட்டு, அதன்பிறகு ஒரு முக்கிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.  நான் தீனா படத்தை இயக்கிகொண்டிருக்கும் போது, அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

எனக்கு விபூதி அடிக்க பாத்த இல்ல..? - "சும்மா கிழி" பாடலை கிழிக்கும் ரசிகர்கள்..! - எங்கிருந்து சுட்டிருக்கிறார் பாருங்க..!

Image
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.  ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  அதற்கு முன்பாக நேற்று மாலை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிங்கில் ட்ரேக் முறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன்படி, பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நான் தான்டா இனிமேலு' என தொடங்கும் இந்தப் பாடல் தான் படத்தில் அறிமுக பாடல் என்று கூறுகிறார்கள்.  வழக்கம் போல அனிருத் பாடல்கள் என்றாலே காப்பியடிக்கபட்டது என்ற சர்ச்சை வலம் வரும். அதே போல சர்ச்சையில் சிக்கியுள்ளார் "சும்மா கிழி" பாடல். இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத், பாடலுக்கு உரிய மெட்டை பல வருடங்களுக்கு முன்பு வெளியான அய்யப்ப சுவாமி ஆல்பத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.  ...

"தர்பார்" FDFS Fever-ஐ கொளுத்தி போட்ட "சும்மா கிழி" பாடல்..! - அதிரும் சமூக வலைத்தளங்கள்..! - வீடியோ இதோ

Image
‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகும் என அரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சற்று முன் வெளியானது சும்மா கிழி என்ற பாடல். FDFS Fever-ஐ இப்போதே கொளுத்தி போட்டுள்ள அந்த பாடல் இதோ,