அஜித்தின் முதல் படத்தில் இதை நான் தான் செய்தேன் - மெகா ஸ்டார் சிரஞ்சீவி பெருமிதம்


நடிகர் அஜித் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கிறார் என நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்தான் அவ்வாறு கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த எல்லா படங்களை பார்த்து விடுவேன். அவர்கள் இருவரையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். 

அவர்களைத் தவிர, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர். இதில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர் நடிப்பில் உருவான வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட எல்லா படங்களையும் பார்த்து விட்டேன். 

அஜித் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கிறார். அதனாலேயே அவருடைய படங்கள் தொடர் வெற்றியைப் பெறுகின்றன. அஜித்தின் முதல் படத்தை நான் தான் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.