Posts

Showing posts with the label Chiranjeevi

2009 ஆந்திராவின் தேர்தல் முடிவு தான்.. 2026 தமிழ்நாட்டின் தேர்தல் முடிவு.. அடித்து சொல்லும் அரசியல் வல்லுனர்கள்..!

Image
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் 10 மாதங்களே உள்ள இந்தத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி முக்கிய கவனம் பெறுகிறது. தனது அரசியல் பயணத்தை அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் அரசியல் மாற்றத்துடன் ஒப்பிட்டு பேசி வரும் விஜய், தமிழகத்தில் புதிய அரசியல் அலையை உருவாக்க முயல்கிறார். ஆனால், அரசியல் வல்லுநர்கள், விஜயின் அரசியல் வருகையை எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்கின்றனர். மாறாக, ஆந்திராவின் நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் பயணத்துடன் இதை ஒப்பிடலாம் என அவர்கள் கருதுகின்றனர். விஜய் vs எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா: ஒப்பீடு சரியா? அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழக அரசியலில் ஆழமான பங்களிப்பு மற்றும் போராட்டங்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள். அண்ணா, 1967 தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர், திரைப்படங்களில் மக்களின் மனதை வென்றதோடு, அரசியல் களத்திலும் தனது தலைமையை நிரூபித்து 1977இல் அதிமுகவை வெற்றி பெறச் செய்தார். இவர்கள் மு...

ஒரே குடும்பத்தில் 3 சகோதரி நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த ஒரே ஒரு நடிகர்..! யாரு தெரியுமா..?

Image
தென்னிந்திய திரைத்துறையில் ஒரு சுவாரஸ்யமான சாதனையாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நடிகைகள் - நக்மா, ஜோதிகா மற்றும் ரோஷ்னி - பிரபல டோலிவுட் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தனித்தனி படங்களில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். 1992-ம் ஆண்டு நக்மா, சிரஞ்சீவியுடன் *க்ரான மொஹடு*, *ரிக்சாவோடு*, மற்றும் *மூன்று மொனகல்லு* ஆகிய தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தார். இந்தப் படங்கள் அவரது நடிப்பு வாழ்க்கையில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. அதைத் தொடர்ந்து, ஜோதிகா, தமிழில் வெளியான *ரமணா* படத்தின் தெலுங்கு ரீமேக்கான *தாகூர்* (2003) படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று, ஜோதிகாவின் புகழை தெலுங்கு சினிமாவில் உயர்த்தியது. மேலும், இவர்களின் அக்காவான ரோஷ்னி, *மாஸ்டர்* என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நடிகைகள் ஒரே முன்னணி நடிகருடன் இணைந்து நடித்த இந்த அரிய சாதனை, திரைத்துறையில் பேசுபொருளாக உள...

இன்னைக்கு நைட்டு சில்க் ஸ்மிதா வரல.. அதனால.. நீங்க.. சுஹாசினியிடம் வேலையை காட்டிய முன்னணி நடிகர்!

Image
சில்க் ஸ்மிதா, இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரு தவிர்க்க முடியாத பெயர். விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு மாவட்டத்தில் உள்ள கோவ்வலி கிராமத்தில் 1960 டிசம்பர் 2 அன்று பிறந்தவர். பள்ளிப்படிப்பை பாதியில் விட நேர்ந்து, இளவயதில் திருமணம் செய்யப்பட்டு, கணவர் மற்றும் மாமியார் வீட்டில் அனுபவித்த கொடுமைகளால் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் தனது சினிமா கனவைத் துரத்தியவர். இயக்குநர் வினு சக்கரவர்த்தியின் கவனத்திற்கு வந்து, 1979ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வண்டிச்சக்கரம் மூலம் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்தப் பாத்திரமே அவருக்கு ‘சில்க் ஸ்மிதா’ என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது. சில்க் ஸ்மிதாவின் தாக்கம் சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சியான நடிப்பு, நடனம், கண்கள் மற்றும் குரல் மூலம் 1980கள் மற்றும் 1990களின் தொடக்கத்தில் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது நடன காட்சிகள் பல படங்களுக்கு திருப்புமு...

அஜித்தின் முதல் படத்தில் இதை நான் தான் செய்தேன் - மெகா ஸ்டார் சிரஞ்சீவி பெருமிதம்

Image
நடிகர் அஜித் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கிறார் என நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்தான் அவ்வாறு கூறியிருக்கிறார்.  அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த எல்லா படங்களை பார்த்து விடுவேன். அவர்கள் இருவரையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அவர்களைத் தவிர, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர். இதில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர் நடிப்பில் உருவான வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட எல்லா படங்களையும் பார்த்து விட்டேன்.  அஜித் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கிறார். அதனாலேயே அவருடைய படங்கள் தொடர் வெற்றியைப் பெறுகின்றன. அஜித்தின் முதல் படத்தை நான் தான் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.

அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்ஜீவி.!

Image
நடிகர் அஜித் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..? அஜித்திற்கு பொதுமக்களை தாண்டி திரைத்துறையிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர்.  இந்நிலையில்,மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் நடிப்பில் உருவாகியுள்ள "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நடிகர் அஜித் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில்sசமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் என்னை மிகவும் ஈர்த்தது. பிங்க் படத்திற்கும் இந்த படத்திற்கும் இருந்த சிறு சிறு வித்தியாசங்கள் என்னை கவர்ந்தது. மேலும்,வேதாளம், விஸ்வாசம் படங்களை எல்லாம் பார்த்தேன். அஜித்தின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து, அரசியல் கலப்பின்றி சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அஜித்தின் திறமை என்னை கவர்ந்துள்ளது.  இன்று பிரமாண்ட ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள அஜித்தின் முதல் படமான "ப்ரேம புஸ்தகம்" படத்தை நான் க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என்று கூறியுள்ளார்.