"காப்பான்" திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஒரு டாப் ஹீரோவா..? - யார் அவர்..?!


அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான்.இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.காப்பான் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்களாகும். மேலும் படத்துக்கு தணிக்கைக் குழு UA சான்றிதழ் அளித்துள்ளனர். 


வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஒரு மேடையில் பேசும் போது, காப்பான் கதை எனக்காக எழுதபட்ட கதை அல்ல. 

கடந்த 2012-ம் ஆண்டு ஒரு டாப் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை. பல்வேறு காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என கூறினார். அதே நேரம், யார் அந்த டாப் ஹீரோ..? என்று நடிகர் சூர்யா குறிப்பிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.