என்ன சார்.. இன்னுமா மிக்ஸர் தின்றீங்க.. வாயை தொறங்க.. நடிகர் சூரியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் அஜித் குமார் என்பவரின் லாக்கப் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி பென்னிக்ஸ்-ஜெயராஜ் லாக்கப் மரணம் தொடர்பாக சூர்யா, "நாம்தான் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், மக்களே" என அரசின் மெத்தனத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது, சம்பவத்திற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி மற்றும் பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால், தற்போது சிவகங்கையில் நடந்த அஜித் குமாரின் லாக்கப் மரணத்தில், குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் கைது செய்யப்படாமல், வெறுமனே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு காவலர் செருப்பு அணிந்தாலோ, தாடி வைத்தாலோ கூட பணியிடைநீக்கம் செய்யப்படலாம். ஆனால், ஆறு பேர் ஒரு...