யோஹான் அத்தியாயம் ஒன்று கதை தான் சமீபத்தில் வெளியாகி மண்ணை கவ்விய இந்த படமா..? - பீதியில் உறைந்த விஜய் ரசிகர்கள்


ஹாலிவுட், பிரெஞ்ச், கொரியா ஆகிய படங்களைப் பார்த்து காப்பியடித்து படங்களை எடுத்து முன்னணி இயக்குனர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களை இந்தியாவில் வெளியானால் மட்டும் தான் பார்க்க முடியும். 

அதன் பிறகு, DVD வடிவில் பர்மா பஜாரில் வெளிவந்த பிறகு பல திரைப்பட ரசிகர்களும் தமிழ் இயக்குனர்கள் சிலரை விட அதிகமான ஹாலிவுட் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யூ டியூப் உள்ளிட்ட இணையங்களின் வளர்ச்சிக்குப் பிறகு அனைவருக்குமே அது எளிதாகிவிட்டது. 

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'சாஹோ' படம் 2008ல் வெளிவந்த பிரெஞ்ச் படமான 'லார்கோ வின்ச்' படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 

அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி காப்பியடித்தால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் என்று டுவீட் செய்யும் அளவிற்கு வந்தது தெலுங்குத் திரையுலகத்திற்கு இழுக்குதான். 

அதே சமயம் 'லார்கோ வின்ச்' பட போஸ்டரைப் போலத்தான் கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பதாக இருந்த 'யோஹன் - அத்தியாயம் ஒன்று' பட போஸ்டரும் அமைந்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் 'யோஹன்' படத்தை 2012-ல்தான் ஆரம்பிக்க இருந்தார்கள். 


'லார்கோ வின்ச்' 2008ல் வெளிவந்த படம். இந்த இரண்டு படங்களின் போஸ்டர்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் ஒருவேளை கவுதம் மேனன் 'லார்கோ வின்ச்' கதையைத்தான் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' ஆக எடுக்க இருந்தாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 

அதை தற்போது 'சாஹோ' மூலம் இயக்குனர் சுஜித் காப்பியடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனாலும், படம் வெளியான நாளே படுத்தது தான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை. போட்ட காசை எடுத்தால் போதும் என்று தயாரிப்பாளர் ப்ரோமோஷன்களை மும்முரமாக செய்து வருகிறார்.

Previous Post Next Post