நடிகை சினேகா மூடி மறைக்கும் விஷயம் - உடைந்த ரகசியம்..!


தமிழில் 'என்னவளே' படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிப்பழகி சினேகா. இவரின் அழகும், அமைதியான நடிப்பும் ஒரு சில படங்களிலேயே இவரை முன்னணி நடிகையாக ரசிகர்கள் முன் நிலை நிறுத்தியது.


முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடன் நடித்த இவர், பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். 


கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், இவர் பாஞ்சாலியாக நடித்த 'குருஷேத்திர' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மஹாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிரமாண்ட படம். 

இதனால் தொடர்ந்து நடிகை சினேகா, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை சினேகா, இரண்டாவது முறையாக மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் மீண்டும் சினேகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துவது சந்தேகம் தான். மேலும் இப்படி வெளியாகியுள்ள தகவல் குறித்து சினேகா - பிரசன்னா இருவருமே வாய் திரைக்கதை நிலையில், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால்,இது போன்ற வதந்திக்களுக்கு உருவம் கொடுக்கும் வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் படத்திற்கு பிறகு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் நடிகை சினேகா. எனவே, நடிகை சினேகா மீண்டும் கர்பமாகியுள்ளார் என்றே தெரிகின்றது.

Advertisement