திருமணத்திற்கு பின்பு தான் என் கணவருக்கு நான் இரண்டாவது மனைவி என்பதை தெரிந்து கொண்டேன் - சமந்தா பகீர்


சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில், பிரபல தொலைகாட்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நான் நாக சைதன்யாவுக்கு  முதல் மனைவி கிடையாது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நானும் நாக சைதன்யாவும் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தோம். பிறகு, இரண்டு வீட்டிலும் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. 

ஆனால், திருமணதிற்கு பின்பு தான் நான் நாக சைதன்யாவின் முதல் மனைவியல்ல என்பது தெரிய வந்தது. நாங்கள் இருவரும் படுக்கையில் இருக்கும் போது இடையில் எப்போதும் ஒரு தலையணை இருக்கும். அவர் எப்போதும் அந்த தலையணையை தான் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவார்.

என்னை கேட்டால் தலையணை தான் அவரது முதல் மனைவி என்று கூறுவேன். சிறுவயதில் இருந்தே அவருக்கு தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளதாம். இந்த தலையணை பிரச்சனை குறித்து நான் இன்னும் அதிகமாக சொல்ல முடியும். ஆனால், இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார் சமந்தா.