அஜித்தை சூப்பர் ஸ்டார் என்று கூறிய திரிஷா-விற்கு பிரபல நடிகர் பதிலடி..!


யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவகாரம் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் வெளியான நிலையில் அமுங்கி கிடந்தது. இந்நிலையில், அஜித்தா, விஜய்யா என்ற சண்டை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


இதற்கெல்லாம், பிள்ளையார் சுழி போட்டது நடிகர் விஜய்யின் அம்மாவும், பின்னணி பாடகியுமான திருமதி.ஷோபா சந்திரசேகர் அவர்கள் தான். பிகில் படக்குழுவுக்கு வாழ்த்து கூறுகிறேன் என்று அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருகிறது மகனே என்று கொளுத்திப்போட்டார்.


இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், சக சினிமா ரசிகர்களுக்கு.....!??? அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் இப்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் என்ன ஆனார்..? என்று ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் ட்ரென்ட் செய்து கொண்டிருக்க, விஜய் ரசிகர்கள் #அன்புள்ளரஜினிவிஜய் என்று ட்ரென்ட் செய்து ரஜினி ரசிகர்களை கூல் செய்தனர். 


ஆனால், யூனிசெஃப் விழாவில் பேசிய நடிகை த்ரிஷா அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என்றார். பெண்களின் உரிமை குறித்து பேசும் படத்தில் பலரும் நடிக்க தயங்கிய கதையில் தைரியமாக நடித்துள்ளார் என்று புகழாரம் சூட்ட விவகாரம் மீண்டும் பரபரப்பானது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பே திரிஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல அரசியல் கட்சி தலைவரும் , நடிகருமான சீமான் ரஜினிக்கு அப்புறம் என் தம்பி விஜய் தான் என ஒரு மேடையில் பேசியுள்ளார். 

ரஜினிக்கு என் மக்களுக்கு சம்பந்தம் இல்லை. ஆனால், விஜய் என் தம்பி. அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். என்று கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார். இதனை தொடர்ந்து, #அன்புள்ளரஜினிவிஜய் மற்றும் #அன்புள்ளவிஜய்ரஜினி என்ற இரண்டு டேக்குகளை ஒரே நேரத்தில் ட்ரென்ட் செய்து மீண்டும் ரஜினி ரசிகர்களை கூல் செய்தனர் விஜய் ரசிகர்கள். 

இப்படியே இந்த விவகாரம் சூடு பிடித்து கொண்டே இருக்கிறது. You May Like

Advertisement