சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான். படம் குறித்து ஆஹா.. ஓஹோ என்ற கருத்து இதுவரை யார் வாயில் இருந்தும் வரவில்லை.
பெரிய நடிகர்கள் படங்களின் முக்கியமான டார்கெட்டே வெள்ளி,சனி,ஞாயிறு என முதல் மூன்று நாட்கள் தான். ஆனால், லட்டு மாதிரி மூன்று நாட்கள் காப்பான் படக்குழுவின் கைக்கு கிடைத்தும் வாய்க்கு எட்டாத நிலைதான் இன்று.
பெரும்பாலான அரங்குகள் காத்து வாங்கிக்கொண்டிருகின்றன. படத்தை பற்றிய விமர்சனமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அயன் படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு மெஹா ஹிட் படம் அமையவே இல்லை.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள காப்பான் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தரை தட்டி நின்றதற்கு முக்கியமான காரணமாக, பிகில் இசை வெளியீட்டு விழாவை சுட்டி காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
நேற்று, முழுதும் அஜித், விஜய் ரசிகர்கள் பிகில் ஆடியோ வெளியீடு பற்றிதான் பேசிக்கொண்டிருந்தனர். இதனால், காப்பான் படத்தின் ப்ரோமோஷன் பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது என்பது தான் உண்மை.
நடிகர் சூர்யாவும் சம்பந்தமே இல்லாத அரசியல் வசனங்களை பேசி சர்ச்சையை ஏற்படுதியாவது படத்தை ரீச் செய்துவிட வேண்டும் என குட்டிக்கரணம் போட்டு பார்த்தார். ஆனால், சூர்யாவின் அரசியல் பேச்சை எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே உதவியது தவிர படத்தின் ப்ரோமொஷனுக்கு துளியும் உதவி செய்யவில்லை என்பது படத்தின் முதல் நாள் ஆக்குபன்ஸி-லேயே தெரிந்து விட்டது.