டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் சிவகார்த்திகேயன்.
அவர் நடித்த படங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எதிர் நீச்சல், வேலைக்காரன் ' ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.
தொடர்ந்து, மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் நன்றாக ஓடிய படங்களின் அளவுக்கோ, சுமாராக ஓடிய படங்களின் அளவுக்கோ கூட பேசப்படவில்லை.
மீண்டும் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வரும் வாரம் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்தப் படம் நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனையை தரும் என கோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். அப்படி படம் வெற்றி பெற்றால் அவர் அடுத்து நடித்து வரும் படங்களுக்கும் பெரிய வியாபாரம் நடக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் ஆருடம் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்..!
Tags
Sivakarthikeyan