பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து, 2017ல் திருமணம் செய்தவர் நடிகை சமந்தா.
தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர், நடிகை லட்சுமி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பகிர்ந்தார் சமந்தா.
அவரிடத்தில் ‛‛நீங்களும், நாக சைதன்யாவும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தது எனக்கு தெரியும், உங்களின் பெட் ரூம் ரகசியங்களை சொல்லுங்கள்'' என்றார் லட்சுமி மஞ்சு.
இதற்கு பதிலளித்த சமந்தா, ‛‛தலையணை தான் நாக சைதன்யாவின் முதல் மனைவி. நான் அவரை முத்தமிட நினைத்தாலும் தலையணை தான் எங்கள் இருவரின் நடுவில் இருக்கும்'' என பேசினார்.
மேலும், படுக்கையறை ரகசியங்கள் இதுவரை போதும் என நினைக்கிறேன். விட்டால், நான் நிறைய பேசிவிட்டேன் என்று சிரிக்கிறார் சமந்தா.


