சமந்தா மற்றும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரீ ரெட்டி கேட்ட ஒரு கேள்வி..! - விளாசும் ரசிகர்கள்


சில காலங்களுக்கு முன்னர் தெலுங்கு திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ-ரெட்டி. காரணம், பிரபல ஹீரோக்கள் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். 


இதற்காக அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார். இதையடுத்து, தமிழில் ராகவா லாரன்ஸ் உட்பட பல்வேறு ஹீரோக்கள் மீதும் பாலியல் புகார் சுமத்தினார். 

இதன்பிறகு, ராகவா லாரன்ஸ் தன்னுடைய படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதும், அப்படியே பல்டி அடித்து, லாரன்சை புகழ்ந்து தள்ளினார். எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ-ரெட்டி தற்போது, நடிகை சமந்தாவை வம்பிழுத்துள்ளார். 


தனது முகநூல் பக்கத்தில், சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்தையும், தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு, "சமந்தா சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால், இதில் யார் மிகவும் சூடாக இருக்கிறார்கள்?" என்று ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் ரொம்பவும் டென்ஷனாகி ஸ்ரீரெட்டியை விளாசி வருகின்றனர்.

Advertisement