கடந்த 2006-ல் வெளிவந்த "தூத்துக்குடி" என்ற படம் பெரிய அளவில் போகலேன்னாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கருவாப்பையா.. கருவாப்பையா... கருவாச்சிய கவுத்துப்பிட்ட... மனசாட்சிய கெடுதுப்பிட்ட’ என்ற பாடல், மெயின் சேனல்கள் தொடங்கி உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பாத நாளே இல்லை என்கிற அளவுக்கு செம ஹிட் அடித்தது.
2007-ம் ஆண்டு வெளியான பிறப்பு படத்தில் முகம் முழுதும் எண்ணெயை பூசிக்கொண்டு உலக அழகி நான் தான் என்று பயமுறுத்தினார். இந்த பாடலும் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனது. ஆனால், பாட்டு ஹிட் ஆகி என்ன செய்ய..?
அடுத்து வந்த வாய்ப்புகள் அத்தனையும் சொதப்பல் ரகம். இதனால் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த கார்த்திகா, நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் போவது என்று பொது விதியின்படி போனவர்தான். இதுநாள் வரை எங்கிருந்தார் என்ற தகவலே இல்லை.
கருவாச்சியாக ஒல்லியாக இருந்த கார்த்திகா, இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு காஸ்மீர் ஆப்பிள் நிறத்தில் பொசு பொசுவென கோடம்பாக்கத்துக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.அக்கா,தங்கச்சியா நடிக்க கூப்பிட்டாங்கன்னுதான் சினிமாவே வேணாம்னு போனார்.
இப்போ அந்த மாதிரி கேரக்டர் இருந்தாலும் நடிக்க தயார் என்று போட்டோ ஷூட் இண்டஸ்ட்ரிக்குள் இறக்கிவிட்டிருக்கிறார். ஏன் இந்த திடீர் முடிவு என்ற கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? கார்த்திகாவின் தங்கையின் படிப்புக்காக இவ்வளவு நாளும் மும்பையில் இருந்தாராம்.
தங்கைக்கு படிப்பு முடிந்ததால் கொளுத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாமல் சென்னைக்கு வந்திருக்கிறார்.பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும் விரைவில் சினிமாவில் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள்.