அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்ஜீவி.!


நடிகர் அஜித் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..? அஜித்திற்கு பொதுமக்களை தாண்டி திரைத்துறையிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர். 

இந்நிலையில்,மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் நடிப்பில் உருவாகியுள்ள "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நடிகர் அஜித் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில்sசமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் என்னை மிகவும் ஈர்த்தது. பிங்க் படத்திற்கும் இந்த படத்திற்கும் இருந்த சிறு சிறு வித்தியாசங்கள் என்னை கவர்ந்தது.

மேலும்,வேதாளம், விஸ்வாசம் படங்களை எல்லாம் பார்த்தேன். அஜித்தின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து, அரசியல் கலப்பின்றி சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அஜித்தின் திறமை என்னை கவர்ந்துள்ளது. 

இன்று பிரமாண்ட ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள அஜித்தின் முதல் படமான "ப்ரேம புஸ்தகம்" படத்தை நான் க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என்று கூறியுள்ளார்.