இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் 'மேகமாய் வந்துப் போகிறேன், வெண்ணிலா உன்னைத் தேடினேன்...' என்ற பாடலின் மூலம் பாடலாசரியராக அறிமுகமானவர் முத்து விஜயன்.
அதன் பிறகு பெண்ணின் மனதைக் தொட்டு படத்தில், கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடலின் மூலம் மேலும் புகழ்பெற்றார். இதுவரை 800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள முத்துவிஜயன்.
பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.மஞ்சல் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென காலமானார். இது, திரையுலகினரை அதிர்ச்சி ஆழ்த்தியது.
சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது. கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன், சமீபகாலமாக தழிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தான் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
Actor Vijay