"புள்ளிங்கோ இருக்காங்க வேற இன்னா வோணும்" - பிகில் பாடல் காப்பியா..? - பாடலாசிரியர் விவேக் அதிரடி விளக்கம்


நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் வெறித்தனம் என்ற பாடல் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மாலை ஆறு மணிக்கு ஆரவாரமாக ரிலீஸ் ஆனது. 


இந்த பாடலில் இடம் பெற்ற " புள்ளிங்கோ இருக்காங்க வேற இன்னா வோணும்" என்ற வரிகள் விஜய் ரசிகர்களின் நரம்பை சிலிர்க்க வைப்பது போல இருந்ததால் உற்சாகத்தில் இருந்தனர் விஜய் ரசிகர்கள். 

இந்நிலையில், புள்ளிங்கோ என்ற வார்த்தை "எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரோ" என்ற பாடலில் இருந்து பாடலாசிரியர் விவேக் உருவி விட்டார் என்று ஒரு தரப்பினர் ட்ரென்ட் செய்ய ஆரம்பித்தனர். 


இதற்கு, அதிரடியாக பதிலளித்துள்ளார் பாடலாசிரியர் விவேக். நான் புள்ளிங்கோ என்ற வார்த்தையை மெர்சல் படத்திலேயே பயன் படுத்தியிருக்கிறேன். 

மேலும், வடசென்னையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை தான் இந்த புள்ளிங்கோ என்ற வார்த்தை. அதனை சமீபத்தில் ட்ரென்ட் ஆன பாடலில் இருந்து காப்பி அடித்து விட்டேன் என்பது தவறு என்று கூறியிருந்தார். 

மெர்சல் படத்தில், " சீன் ஆவும் அவன் வன்டான்னா.. பொடி இஸ்கூலு புள்ளிங்கோ-லாம் செதறு" என மெர்சல் படத்திலேயே புள்ளிங்கோ என்ற வார்த்தையை பயன்படுத்தியை விஜய் ரசிகர்கள் எடுத்து ட்ரென்ட் செய்ய துவங்கி விட்டனர்.
Previous Post Next Post