அவருடன் நடனமாடினால் வியர்த்து போய் விடும் - நடிகை சமந்தா ஒப்பன் டாக்


2010ல் வெளியான "பானா காத்தாடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

"நீதானே என் பொன் வசந்தம்", "நான் ஈ", "கத்தி", "24", 'மெர்சல்", "சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

ஒல்லியாக, சிக்கென இருக்கும் இவர் நடனமாடுவதிலும் திறமை உள்ளவர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவரிடம் யாருடன் நடனமாடுவது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்று கேட்கப்பட்டது.  

அதற்கு பதிலளித்த அவர் " கண்டிப்பாக ஜூனியர் என்.டி.ஆருடன் நடனமாடுவது தான் கஷ்டமாக இருக்கும். கடினமான நடன அசைவுகளை கூட ஈசியாக அவர் செய்து விடுவார். ஆனால், நான் ரிகர்சல் செய்து விட்டு தான் போடுவேன். 

அவருடன் நடனம் ஆட சென்றாலே உடைகள் களைந்து,சிகை அலங்காரம் எல்லாம் கலந்து வியர்த்து போய் தான் வருவேன் என்று கூறியுள்ளார் சமந்தா.
Previous Post Next Post
--Advertisement--