தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 2021 சட்ட மன்ற தேர்தல் குறித்த விவாதங்கள் இப்போதே தொடங்கி விட்டன.
காரணம், நடிகர் ரஜினிகாந்த் "2021 சட்ட மன்ற தேர்தலில் போட்டிடுவேன்" என்று கூரியுள்ளது தான். அநேகமாக, அதிமுக + ரஜினி + பாஜக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளது என பலரும் நம்புகிறார்கள்.
கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை சுற்றி எப்போதும் ஒரு அரசியல் பார்வை இருந்து கொண்டே இருக்கும்.
சமீபத்தில் கூட, ஒரு குடிமகன், ஒரு வாக்காளன் என்பதை தவிர அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நடிகர் அஜித் அறிக்கை வாயிலாக தன்நிலை விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அஜித், ரஜினி, விஜய் ஆகியோர் மீதான அரசியல் எதிர்பார்ப்பு குறித்து கேட்டபோது, " விஜய் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ரஜினி, அஜித் போன்ற நல்ல நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்" என்று ஒரே போடாக போட்டுள்ளார்.