இன்புளூயன்சர் வீட்டில் 120 பவுனை திருடிய நபர் யார்? ஷாக் CCTV!இப்போவும் கிளுகிளுப்பு கேட்குதா? ட்ரெண்டாகும் பழைய ரீல்ஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் பகுதியில் வசிக்கும் இளம் தொழிலதிபர் வினோத்குமார் – மதுமிதா தம்பதியினர் வீட்டில் நடந்த சம்பவம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஏலக்காய் உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் வினோத்குமாரும், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் குடும்ப வாழ்க்கை, நகைகள், பணம் தொடர்பான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த மதுமிதாவும் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டை வாங்கி குடியேறியதாகத் தெரிகிறது.

வியாழக்கிழமை மாலை குடும்பத்தினருடன் துணி வாங்கச் சென்ற அவர்கள் இரவு வீடு திரும்பியபோது பின்பக்கக் கதவின் பூட்டு வெட்டப்பட்டிருந்தது. படுக்கையறைக்குள் சென்றதும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 118 முதல் 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணமும் இல்லாமல் போயிருந்தன.

மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. வீட்டுக்குள் புகுந்தவர்கள் சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து முகத்தைப் பதிவு செய்யாதவாறு செயல்பட்டு, பைக்கில் தப்பிச் சென்றதாக போலீசார் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

ராஜாக்கமங்கலம் போலீசார் வீட்டைப் பரிசோதித்து மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொள்ளை நடப்பதற்கு முந்தைய நாள் லிப்ஸ்டிக் போட்டு சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுகிறதா என்று கேட்டு வீட்டைச் சுற்றிப் பார்த்துச் சென்ற தகவலும் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.

மதுமிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைகள், பணக்கட்டுகள், குழந்தைக்குப் பணம் கொண்டு செய்யும் காட்சிகள் உள்ளிட்ட ரீல்ஸ்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

வெளியே செல்லும்போதும் இடத்தை அப்டேட் செய்யும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கொள்ளையர்களுக்கு நேரத்தைத் தேர்ந்தெடுக்க உதவியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் பார்த்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மதுமிதாவின் பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது. அதில் ஒரு ஃபாலோவருக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் பேசியதாவது: “நான் எந்த வீட்டில் இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாது. நான் ஆறு வீடு வைத்திருக்கிறேன். ஆறு வீட்டிலும் நான் எந்த வீட்டில் இருப்பேன் சொல்லு பார்க்கலாம்.

நீ இப்படி வன்மத்தைக் கொட்டுகிறாய். இவ வீட்டில் போய் திருடு, இவ வீட்டில் போய் கொள்ளை அடி என்று சொல்கிறாய். சம்பாதிக்காத உனக்கே இவ்வளவு சிந்தனை வரும்போது, இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கும் எனக்கு அதைக் காப்பாற்ற வழி தெரியாதா?” என்று கூறியிருந்தார்.

மேலும் ஒரு ரூபாய் போட்டு நான்கு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் உழைக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

கொள்ளை நடந்த பிறகு இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அக்காவின் வாயை மூடி வைத்திருக்கலாமே என்றும், சிலர் சமூக வலைதளத்தில் செல்வத்தை அதிகம் காட்டுவதால் வரும் ஆபத்து என்றும் பேசுகின்றனர். இதற்கிடையே மதுமிதா மீண்டும் குடும்பத்துடன் வீடியோக்களைப் போடத் தொடங்கியுள்ளார். கமெண்ட் பிரிவை மூடிய நிலையில் ரீல்ஸ் தொடர்கிறார்.

போலீசார் கொள்ளையர்களை அணுகுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சமூக வலைதளத்தில் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டுவது பாதுகாப்புக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவாதமும் இந்தச் சம்பவத்துடன் இணைந்து நடந்து வருகிறது. விசாரணை தொடர்கிறது.

English summary : Nagercoil-area influencer Madhumitha and businessman husband Vinothkumar returned home Thursday night to find their VIP Garden house burgled. About 118–120 sovereigns of gold and diamond jewellery plus ₹50,000 cash (est. ₹1 crore) were taken after the rear door lock was cut. Police are probing social-media posts that showed wealth and family movements. An old video of her saying she owns six houses has gone viral.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.