ஒரே ஒரு ஆர்டர் - 30,000,0000 ரூபாய் இழப்பு - அதிர்ச்சியில் "பிகில்" தயாரிப்பு நிறுவனம்..!


விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஆளும்கட்சியை விமர்சிக்கும் விதத்தில் நடிகர் விஜய் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பேசி, வேளியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக, தானும் கதறி தன்னை சார்ந்தவர்களையும் கதற விட்டு கொண்டு இருக்கிறார். 

பட விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதையும், அவர்கள் நடத்தும் போராட்டங்களினால் இந்திய அளவில் விளம்பரம் அடைந்து, வசூலை வாரிக்குவிப்பதையும் நடிகர் விஜயின் படங்கள் வழக்கமாக கொண்டுள்ளது. 

இந்நிலையில் பிகில் திரைப்படத்திற்கும் அதே யுக்தி பயன்படுத்தப்பட்ட நிலையில், சுதாரித்து கொண்ட அரசியல் கட்சிகளோ இம்முறை நூதனமாக நெருக்கடி கொடுத்து வருகிறது. அதாவது விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் மட்டுமே பல கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிக்குவிக்கும். 

இந்த காட்சிகள் அரசின் அனுமதி பெற்ற பின்னரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும். இதன் காரணமாக நடிகர் விஜயை ஆர்ப்பாட்டம், போராட்டம் இன்றி, தங்களிடம் மன்னிப்பு கோர வைக்க, இந்த சிறப்பு காட்சிகளுக்கு நாசுக்காக தடை விதித்து விட்டது அரசு. 

ஏற்கனவே நூறு கோடிக்கும் மேல், தமிழக விநியோகஸ்த உரிமையை பிகில் படக்குழு விற்பனை செய்திருந்த நிலையில், 'சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட வில்லை என்றால், தாங்கள் வழங்கிய தொகையில் பாதியை திருப்பி தரவேண்டும்' என விநியோகஸ்தர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார்களாம்.

இதன் காரணமாக சுமார் 30 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது,