தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்


தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் "பிகில்" படம் ரிலீஸ் ஆகாது என்ற தகவல் வெளியாகி அந்த பகுதி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. ஆம், கரூர் மாவட்டத்தில் பிகில் படம் ரிலீஸ் ஆகப்போவதில்லை. 

கரூரில் உள்ள அஜந்தா, எல்லோரா, திண்ணப்பா, அமுதா, பொன் அமுதா, கலையரங்கம், கவிதாலயா  என்று ஏழு ஏசி தியேட்டர்களும் வெற்றி, லட்சுமிராம் என்று இரண்டு சாதாரண தியேட்டர்களும் உள்ளன. 

இதில் அமுதா, கவிதாலயா போன்ற தியேட்டர்கள் திருட்டு விசிடி தயாரித்த வழக்கில் சிக்கி உள்ளன. அதை தொடர்ந்து மிகுந்த கெடுபிடியுடன் நடந்துகொள்கின்றனர் அந்த தியேட்டர்  அதிபர்கள். இந்நிலையில், பிகில் தயாரிப்பு நிறுவனம் தியேட்டர் உரிமை பெற அதிக விலை கேட்கிறதாம். 


இதனால், கரூரில் உள்ள அனைத்து தியேட்டர்களும் கூட்டாக சேர்ந்து படத்தை வெளியிட போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதே போல, எந்திரன் படத்தையும் வெளியிடாமல் புறக்கணித்தனர் கரூர் தியேட்டார் உரிமையாளர்கள் என்பது குறிப்படத்தக்கது. 

இதனால், கரூரில் உள்ள ஒரு சாதாரண தியேட்டரில் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியதாக போய்விட்டது. அதே நிலை இப்போது பிகில் படத்திற்கும் வந்துள்ளது. இது ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

--- Advertisement ---