முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாள்களில் ஒரு திரைப்படம் வெளியானால் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வெற்றிகரமாக ஓடும்.
50 நாட்கள், 100 நாட்கள் என தாண்டி, 175 நாள்கள் ஓடி வெள்ளி விழா சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் தமிழ் சினிமாவில் அதிகம்.
ஆனால், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு திரைப்படத்தை 2 வாரங்கள் ஓட்டிவதே திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய சவாலான விஷயமாக உள்ளது.
இதற்கு, புதிய திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசான அதே நாளில், அத்திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படுவது தான்.
இந்நிலையில்,இந்த தீபாவளிக்கு பிகில், கைதி என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இது குறித்து கைதி படத்தின் ஹீரோ நடிகர் கார்த்தி பேசுகையில், பிகில் பெரிய படம் தான். அதற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைக்கும்.
ஆனால், கைதிக்கும் கணிசமான திரையரங்குகள் கிடைக்கும் என நம்புகிறேன். விஸ்வாசம்-பேட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வந்த போது பிகில் - கைதி படங்களும் வரலாமே,,! ஒன்னும் தப்பில்லயே..!. என அதிரடியாக கூறியுள்ளார்.