பிகில் படத்தின் அந்த காட்சி இந்த படத்தின் அட்டர் காப்பி - வீடியோவை வெளியிட்டு அட்லியை விளாசும் ரசிகர்கள்


நேற்று திரைக்கு வந்த பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். 

இந்நிலையில், பிகில் படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வரும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை அப்படியே "பீலே" படத்தில் இருந்து சுட்டு எடுத்து வைத்துள்ளார் அட்லீ என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

"பீலே" படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இரண்டிலும் இசையும் ஒரே மாதிரி இருக்கிறது எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காப்பி அடிக்க வேண்டியது தான். அதற்க்கேன ஒரு ஃபிரேமை அப்படியேவா காப்பி அடிக்குறது என்று அட்லி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள் ரசிகர்கள்.

Advertisement