அடேங்கப்பா..! -பிகில் படத்தின் ஒரிஜினல் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா..? - திகில் அப்டேட்


இயக்குனர் அட்லியின் அடுத்த வெற்றிப்படைப்பாக பிகில் திரைப்படம் மாறியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி அவற்றை மறைத்து மாஸாக நிற்கிறது. 

படத்தின் முதல் 35 நிமிடம் எதற்கு என்று தெரியவில்லை. முதல் 35 நிமிட கதையை 5 நிமிடத்தில் கூறிவிட்டு கதைக்குள் சென்றிருந்தால் படம் இன்னும் ஸ்பீடு காட்டியிருக்கும். 35 நிமிடத்திற்கு பிறகு நடிகர் கதிர் கொலை செய்யப்படும் போது தான் ரசிகர்கள் படத்திற்குள் வருகிறார்கள்.

இத்தனைக்கும் பல திரையரங்குகளில் நேரம் கருதி உனக்காக வாழ நெனைக்குறேன் பாடலை ஒரு நிமிடமாக ஸ்ரிங் செய்து விட்டார்கள் என்று தகவல்கள் வருகின்றன.படத்தின் தற்போதைய ரன்னிங் டைம் 3 மணி நேரம்.ஆனாலும், இரண்டாம் பாதியில் கதையில் இருந்து வெளியே வர இடமே இல்லாத காரணத்தினால் நேரம் போவதே தெரியவில்லை. 

ஆனால்,தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தின் ஒரிஜினல் ரன்னிங் டைம் 226 நிமிடங்களாம். அதாவது, மூன்றே முக்கால் மணி நேரத்திற்குபடத்தை எடுத்து மூக்கால் மணி நேர காட்சிகளை வெட்டி வீசிவிட்டு மூன்று மணி நேர படத்தை டெலிவரி செய்துள்ளது படக்குழு. 

படத்தின் முதல் 35 நிமிடத்திலும் சில இடங்களில் கத்தரியை வைத்தால் படம் இன்னும் சிறப்பாக இருக்கும், திரையரங்குகளுக்கும் செலவு மற்றும் டைம் மேனஜ்மென்ட் தொல்லை மிச்சமாகும் , இதனை படக்குழு கவனிக்குமா..? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Advertisement