சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை தமன்னா நடித்துள்ள படம் - ஆக்ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை- ஹிப்ஹாப் தமிழா. தயாரிப்பு - டிரிடண்ட் ஆர்ட்ஸ். விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.
அயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் ஆக்ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.
இதில் மத கஜ ராஜா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்குண்டான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில், ஆக்ஷன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள " நீ சிரிச்சாலும்" என்ற ரொமாண்டிக் பாடல் லிரிக் வீடியோவுடன் சற்று முன்பு வெளியானது.
இந்த பாடலில் நடிகை தமன்னா-விஷால் ரொமாண்டிக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இதோ அந்த வீடியோவில் இருந்து ஸ்நாப்பிய புகைப்படங்கள்,