என்னது பிகில் படத்தோட தலைப்பை மாத்திட்டாங்களா..?.. ஆம், மாற்றி விட்டார்கள். ஷாக் ஆகாதிங்க..! தமிழில் "பிகில்" தான். தெலுங்கில் டப்பாகி வெளியாகும் பிகில் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர்.
தூய தமிழ் வார்த்தை அல்லாத ரேண்டமான சொல் தான் "பிகில்". அதனால், அனைத்து மொழிகளிலும் அதே தலைப்பு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கு பதிப்பிற்கு தலைப்பை மாற்றியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் பாடல்கள் செப்டம்பர் 19-ம் தேதி வெளியானது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பிகில் டீசர் எப்போது வரும் என்று ரசிகர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்திற்காக அதிக அளவில் உழைத்து வருகிறோம். பிகில் டீசர் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை பிகில் படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, தெலுங்கு படத்திற்கு "விசில்" என பெயர் வைத்துள்ளது படக்குழு.