போட்ட காசை எடுக்கவே தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியை பிகில் வசூல் செய்யணும் - பீதியை கிளப்பிய விநியோகஸ்தர்


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட 4200 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. 

இந்த நிலையில், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய திரையில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பிகில் பெற்றுள்ளது. ஆம், ஆந்திரப்பிரதேச மாநிலம் சூலூர்பேட்டையில் வி எபிக் என்ற திரையரங்கும் க்யூப் சினிமா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 100 அடி அகலத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதுதான் இந்த வி எபிக் திரையரங்கின் சிறப்பம்சம். இப்படி பரபரப்புக்கும், விருவிருபுக்கும் கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருகிறது பிகில். 

இந்நிலையில், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், பிகில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்ட தட்ட 90 கோடி ரூபாய்க்கு வியாபாரம் மட்டும் ஆகியுள்ளது. 


எனவே, 200 கோடி ரூபாயை வசூல் செய்தால் மட்டுமே 150 கோடி என்ற நெட் கலக்ஷன் மற்றும் வரி அனைத்தும் போக லாபம் என்ற வட்டத்துக்குள் படம் நுழையும் என்று பீதியை கிளப்பியுள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியாகி இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் அது சர்கார் திரைப்படம் தான். தமிழகத்தில் மட்டும் 126 கோடி ரூபாயை சர்கார் வசூலித்தது. முன்னதாக, மெர்சல் 125.5 கோடி ரூபாயும், தெறி 78 கோடி ரூபாயும் வசூலித்தன (தமிழகத்தில் மட்டும்). 

இந்நிலையில், பிகில் 200 கோடி வசூலித்தால் தான் லாபக்கணக்கையே துவங்கும் எனதகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post
--Advertisement--