பிகில் திரைப்பபடம் நாடு முழுதும் நாளை வெளியாவதில் எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது.
இந்நிலையில், பிகில் படக்கதை தொடர்பான பதிப்புரிமை வழக்கில் படத்தை வெளியிட தடை கோரி புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
‘பிகில்’ கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் தனது "பிரேசில்" கதையையும் அட்லி எடுத்துள்ள "பிகில்" கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கதைப்படி, "வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன் மற்றும் அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதும், தடைகளை தாண்டி அந்த அணி சாதிப்பது என எனது கதை " என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிகில் வெளியாவதில் எந்த தடையும் இல்லை என்றும் கதை குறித்த வழக்கு தொடர்ந்து நடக்கும் எனவும் உத்தவிட்டார்.