நடிகர் விஜய்யின் பிகில் தமிழ்நாடே கடந்த சில மாதங்களாக எதிர்ப்பார்த்த ஒரு பெரிய படம். விஜய், ஏ.ஆர். ரகுமான், அட்லீ, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் என பெரிய குழுவே இப்படத்திற்காக இணைந்தனர்.
ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் அதாவது 180 கோடியில் தயாரான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இப்படம் 5 நாள் முடிவில் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ரசிகர்களும் #BigilHits200CRs என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.
சரி உலகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களும் பிகில் எவ்வளவு வசூல் செய்தது என்ற விபரத்தை இங்கே பார்க்கலாம்.
முதல் நாள் : ரூ. 60 கோடி
இரண்டாம் நாள் : ரூ. 42 கோடி
மூன்றாம் நாள் : ரூ. 40 கோடி
நான்காம் நாள் : ரூ. 33 கோடி
ஐந்தாம் நாள் : ரூ. 27 கோடி
மொத்தம் : 202 கோடி