அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் 12-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது "பிகில்" படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. அதன் படி, வரும் 25-ம் தேதி உலகம் முழுதும் படம் ரிலீசாகவுள்ளது. மேலும், பல திரையரங்ககள் நிச்சயம் பிகில் படத்தை திரையிடுகிறோம் என தயாரிப்பு குழுவிற்கு நம்பிக்கைகொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், 2019 தீபாவளி வழக்கமான தீபாவளியாக இருக்க போவதில்லை. ஞாயிற்றுகிழமையில் தீபாவளி வந்துள்ளது. மேலும், சனி, திங்கள் கிழமை அரசு விடுமுறை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


