லட்சகணக்கில் மோசடி செய்த நடிகை சரிதா நாயர் - மூன்று வருடங்கள் சிறை - பரபரப்பு தீர்ப்பு


நடிகை சரிதா நாயர். பல்வேறு மோசடி சர்ச்சைகளில் சிக்கிய இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளா முதல்வராக இருந்த உம்மன்சாண்டியின் அதிகார அரசியலை அசைத்ததுடன் தமிழக பிரமுகர்கள் வரை பல பெருந்தலைகளை உருட்டி விட்டவர். 

கடந்த 2011-ம் ஆண்டு கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போதுதான் மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, சூரிய ஒளி (சோலார் பேனல்) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. 

சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உபகரணங்களை வாங்குவதற்கு கேரளா அரசு மானியமும் வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து நடிகை சரிதா நாயர் சோலார் மின்உற்பத்தி ஆடுகளத்தில் இறங்கினார்.

சரிதாவை நம்பி கோடி கோடியாய் பணத்தை கொட்டினர் தொழிலதிபர்கள்.சரிதா நாயரின் காட்டில் பணமழை கொட்டிக் கொண்டே இருந்தது. ஆனால் பணத்தைக் கொடுத்தவர்களுக்கு பட்டை நாமம் விழுந்து கொண்டே இருந்தது. ஒருவருக்கு கூட சூரிய மின் உற்பத்தி மையம் அமைத்து தராமல் இழுத்தடித்தார் சரிதா.

மேலும், தம்மை பாலியல் ரீதியாக அனுபவித்தவர்கள் பட்டியலில் உம்மன் சாண்டி தொடங்கி பலரது பெயரையும் சந்திக்கு கொண்டு வந்துவிட்டு செல்வாக்கை சரித்து விட்டார் சரிதா. இவருடைய கசமுசா வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஏற்கனவே கேரளாவில் சரிதா நாயருக்கு இத்தகைய மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. காற்றாலை மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கோவையில் கற்றாலை அமைத்து தருவதாக கூறி 26 லட்சம் ருபாய் மோசடி செய்துள்ளார் அவர். இந்த வழக்கில் சரிதா நாயர் மற்றும் அவரது லிவ்-இன்-டுகெதர் பார்ட்னர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி என்ற மூவர் மீது வழக்கு நடந்துவந்தது. 

வழக்கின் தீர்ப்பு நேற்று வழக்கங்கப்பட்டது. அதில் நடிகர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் அவருக்கு கூடுதலாக மேலும் 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement