ப்ப்பா...! என்னா அழகு டா சாமி..! - ஆராய்ச்சி முடிவில் ஷாக் ஆன விஞ்ஞானிகள்..!


அறிவியல் ரீதியாக யார் உலக அழகி என சர்வதேச விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவில் பல ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. 

"இயல் அழகு தரநிலைகளின் தங்க விகித முறை" என்ற கிரேக்க நாட்டு கணித விதிமுறையை அடிப்படையாக எடுத்துக்கொண்டு  உலகின் மிகவும் அழகான பெண்மணி யார்..? என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வு ஒன்றை அறிவியல் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து நடத்தினார்கள். 

இந்த விஞ்ஞானிகள் குழு பின்பற்றிய இந்த விதிமுறை, கிரேக்கர்கள் அழகை வருணிக்கவும், அளவிடவும் பின்பற்றிய பழங்கால முறையாகும். இதனை பின்பற்றி கணக்கிட்டதன் அடிப்படையில் 'பெல்லா ஹேடிட்' (Bella Hadid) என்ற மாடல் அழகியை அறிவியல் ரீதியாக உலக அழகி என விஞ்ஞானிகள் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். 


லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவர் "ஜூலியன் டி சில்வா" என்பவர் இந்த "இயல் அழகு தரநிலைகளின் தங்க விகித முறை"-யை பின்பற்றி இந்த சோதனையை மேற்கொண்டார்.

சோதனை முடிவில், பெல்லா ஹேடிட் தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு இந்த சோதனை மூலம் 94.35% மதிப்பெண்கள் அளிக்கபட்டுள்ளது.இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக, 94% மதிப்பெண் பெற்ற அழகி இவர் தான்.

இவருக்கு அடுத்தபடியாக 92.44% மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிரபல பாப் பாடகி பியான்சே பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து, முதலிடத்தை பிடித்த பெல்லா ஹேடிட்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



A post shared by 🦋 (@bellahadid) on


Previous Post Next Post
--Advertisement--