தெறி, மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் கடந்த வருடத்தின் இறுதியில் துவங்கியது.
நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமை பிகில் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு ஷாரூக் கான் நடித்த ஜீரோ படம் யூடியூபில் 2 மில்லியன் லைக்குகளை வாங்கியது. பிகில் படம் அதைத்தாண்டி அதிக லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், பிகில் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ரூபாய் 25 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து, நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தி மற்றும் தமிழ் என இரண்டுமொழிகளில் உருவாகவுள்ள படத்தை இயக்குனர் அட்லி இயகுகிறார். இந்த படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்தைகொடுக்க போராடி வரும் ஷாருக்கானுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.