"பிகில்" படம் வெற்றி பெற வேண்டி டைல்ஸ் தரையில் சோற்றை கொட்டி சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. 

தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள ‘பிகில்’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இயங்கி வரும் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விஜய் படம் வெற்றியடைய வேண்டியும், விஜய் நீடுழி வாழ வேண்டியும் அவர்கள் அர்ச்சனை செய்தனர். அதனை, தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட கோயில் வளாகத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை கொட்டி சாப்பிட்டுகொண்டே பிரார்த்தனை செய்தனர். 


மேலும், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் படம் நிச்சயம் வெற்றி பெரும் எனவும் எங்கள் பிராத்தனைக்கு சரியான பலன் கிடைக்கும் எனவும் நம்பிக்கையாக கூறினர்.


Previous Post Next Post
--Advertisement--