பிகில் ரிலீஸ் - விரக்தியில் விஜய் ரசிகர்கள் - தியேட்டர்கள் தரப்பில் இருந்து வந்த தகவல்..!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ஆனால் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்” எனவும் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்று அதிகாலை திரையரங்குகளில் ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை பட ரிலீசுக்கு தேவையான KDM லைசென்ஸ் எந்த திரையரங்கிற்கும் கொடுக்கப்படவில்லை. 

இதனால், அதிகாலை இரண்டு மணி மற்றும் நான்கு மணி காட்சிக்கு டிக்கெட்டுகளை எடுத்திருந்த விஜய் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். விசாரித்ததில் இன்னும் சற்று நேரத்தில் அதாவது 5 மணி அல்லது 5:30 மணிக்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என தியேட்டர்கள் தரப்பில் வந்த தகவல்கள் கூறுகின்றன.