அது மட்டும் வந்துவிட்டால் தளபதிக்கு கோவிலே கட்டுவோம் - பிகில் பட பிரபலம் உருக்கம்


நடிகர் விஜய் பலருக்கும் அந்த உதவி செய்தார். இந்த உதவி செய்தார் என அவ்வபோது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவும். நீங்களும் அதை கடந்து வந்திருப்பீர்கள்.

அந்த வகையில், தற்போது பிகில் படத்தில் பணியாற்றிய சண்டை கலைஞர்கள் விஜய் பற்றி பேசியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

இவர்களிடம் மிகவும் அன்பாக பேசும் விஜய் அவர்களது நலனுக்காக பல்வேறு விஷயங்களை செய்துள்ளாராம். 800 சண்டை கலைஞர்களை FEFSI யூனியனில் சேர்க்க உதவியுள்ளார் விஜய். 


இது குறித்து சண்டை கலைஞர்கள் பேட்டி ஒன்றில் கூறுகையில், நாங்கள் FEFSI யூனியனில் சேர விஜய் உதவினர். தற்போது மெம்பெர்ஷிப் கார்டுக்காக காத்திருக்கிறோம். 

அது மட்டும் வந்துவிட்டால் தளபதிக்கு கோவிலே கட்டுவோம். மேலும், எங்கள் யூனியனில் விஜய் புகைப்படத்தை வைத்து கும்பிடுவோம். என உருக்கமாக பேசியுள்ளார் சண்டை கலைஞர் ஒருவர்.

--- Advertisement ---