தன் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையே முறியடிக்க தவறிய விஜய்..! - பிகில் முதல் நாள் வசூல் நிலவரம்..!


பிகில் திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. 

படத்தின் முதல் 35 நிமிடம் மற்றும் நம்ப முடியாத VFX காட்சிகள், விஜய்க்கு கொடுக்கப்பட ஓவர் பில்டப் மற்றும் ஸ்லோமோஷன் காட்சிகள் என இருக்கும் சில குறைகள் படத்தின் வேகத்தை குறைத்து கதையின் மீது இருந்த நம்பிக்கையை குறைத்து விட்டன. 

ஆனால், ஒட்டு மொத்த படமாக பார்க்கும் போது எமோஷனல் காட்சிகள் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதால் தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்று பார்க்கும் விதத்தில் அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இன்னொரு படம் தான்  "பிகில்"என்று சொல்லலாம். 

ஆனால், இந்த படம் நடிகர் விஜய்யின் படமான சர்கார் படத்தின் வசூல் சாதனையே முறியடிக்கமுடியாமல் திணறி விட்டது தான் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. 

ஆம், சென்னையில் மட்டும் படம் வெளியான முதல் நாள் 1.80 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது பிகில். ஆனால், விஜய்யின் முந்தைய படமான சர்கார் 2.40 கோடி வசூல் செய்தது. கிட்ட தட்ட 60 லட்ச ரூபாய் வித்தியாசம். இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தினால் தான் பிகில் வசூல் குறைந்துள்ளது என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.