சினிமாவில் பல கலைஞர்கள் அடையாளம் கிடைக்க போராடி வருகின்றனர். அப்படி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.
தமிழில் மூன்று சீசன்கள் முடிந்துவிட்டது, அடுத்த சீசன் எப்போது என்பதற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டவர் காஜல் பசுபதி.
இவர் நடன இயக்குனர் சாண்டியின் முதல் மனைவி ஆவர். அவரை முறையாக விவாகரத்தும் செய்தவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற சாண்டிக்கு ஆதரவாக டிவிட்டரில் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்சிக்கு என்னை அழைத்தார்கள் என்றும் ஆனால் நான் சாண்டியின் மகள் லாலா-விற்காக தான் செல்லவில்லை விட்டுக்கொடுத்து விட்டேன் என்றும் அழுவது போல கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,