மிகவும் மோசமான பரவை முனியம்மாவின் உடல்நிலை - நேரில் சென்று உதவி செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே


பிரபல நாட்டுபுற பாடகி பரவை முனியம்மா. மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற கிராமத்தில் பிறந்ததாள் பரவை முனியம்மா என்று பிரபலமானார். விக்ரம் நடிப்பில் வெளியான "தூள்" படத்தில் இடம் பெற்ற சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடலின் மூலம் சினிமாவில் தன்னுடைய குரலை பதித்தார். 

இதன் மூலம் இவருக்கு பல பட வாய்புகள் மற்றும் மேடைகளில் பாடும் வாய்புகள் வந்தன. அந்த அளவுக்கு தூள் படத்தின் பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. 

தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர் உடல்நிலை அடிக்கடி மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

மறைந்த முதலமைச்சர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு கட்டத்தில் இவருக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ருபாய் பணம் கிடைத்து வருகின்றது. அந்த தொகை சிகிச்சைக்கு போதவில்லை. 

இந்நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை சில வாரங்களாக மோசமாகவே உள்ள நிலையில் பிரபல நடிகர் அபி சரவணன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பண உதவி செய்துள்ளார். மேலும், அவரது மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாக அபி சரவணன் தெரிவித்துள்ளார்.