Posts

Showing posts with the label Paravai Muniyamma

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த "பரவை முனியம்மா" காலமானார் - அதிர்ச்சி தகவல்..!

Image
சியான் விக்ரமின் தூள் படத்தின் " ஏய்..சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.  ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.  தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் "ராயபுரம் பீட்டரு.." என்ற பாடலை பாடியதுடன் அந்த பாடலில் நடித்தும் இருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் மோசமான பரவை முனியம்மாவின் உடல்நிலை - நேரில் சென்று உதவி செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே

Image
பிரபல நாட்டுபுற பாடகி பரவை முனியம்மா. மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற கிராமத்தில் பிறந்ததாள் பரவை முனியம்மா என்று பிரபலமானார். விக்ரம் நடிப்பில் வெளியான "தூள்" படத்தில் இடம் பெற்ற சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடலின் மூலம் சினிமாவில் தன்னுடைய குரலை பதித்தார்.  இதன் மூலம் இவருக்கு பல பட வாய்புகள் மற்றும் மேடைகளில் பாடும் வாய்புகள் வந்தன. அந்த அளவுக்கு தூள் படத்தின் பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.  தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர் உடல்நிலை அடிக்கடி மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.  மறைந்த முதலமைச்சர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு கட்டத்தில் இவருக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ருபாய் பணம் கிடைத்து வருகின்றது. அந்த தொகை சிகிச்சைக்கு போதவில்லை.  இந்நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை சில வாரங்களாக மோசமாகவே உள்ள நிலையில் பிரபல நடிகர் அபி சரவணன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பண உ...