ஒருவழியாக பிகில் டிரைலர் வரும் அக்.12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் தொடர்பான சாதாரண விஷயத்தைக் கூட இந்திய அளவில் டிரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள், டிரைலரை சும்மா விடுவார்களா என்ன.
இப்போதே பெரும் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர். இந்த கொண்டாட்டம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சென்சார் என்ற பெரிய தலை வலியை தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருகின்றது படக்குழு. பிகில் படத்தை இன்னும் சென்சார் லிஸ்டில் கூட கொண்டு வரவில்லை.
இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி நாளை (அக்டோபர் 10) பிகில் திரைப்படம் மற்றும் ட்ரெய்லர் மற்றும் தொலைக்காட்சி ப்ரோமோக்கள் ஆகியவை சென்சார் செய்யபட வாய்ப்புள்ளதாகவும் எந்த பிரச்னையும் இல்லாத பட்சத்தில் நாளை மறுதினமே சான்று வழங்கப்பட்டு விடும் என்றும் கூறுகிறார்கள்.
இது படக்குழுவிற்கு சற்று ஆறுதலான விஷயம். ஆனால், இன்னொரு பக்கம் புயல் போல பிரச்சனை சுழன்று அடித்துக்கொண்டிருகின்றது. காரணம், எதிர்பார்த்ததை விடவும் அதிக அரங்குகளை கைதி திரைப்படம் ஆக்கிரமித்துள்ளது என்பது தான்.
இந்த வருடம் தீபாவளிக்கு ஞாயிறு மட்டும் தான் விடுமுறை என்று உறுதியாகி விட்ட நிலையில் வழக்கமான வெள்ளிக்கிழமை படமாக தான் தீபாவளி ரிலீஸ் படங்கள் இருக்க போகின்றன. இப்படி சுற்றி சுற்றி வேலை நாட்களாக இருக்கும் நேரத்தில் 180 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை இறக்குகிறார்கள் AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.