தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அவர். தான் உண்டு தன் வேலையுண்டு என அடக்க ஒடுக்கமாக இருப்பவர் என்ற நல்ல பெயர் அவருக்கு உள்ளது. ஆனால், அவருடைய தீவிரமான ரசிகர்கள் தற்போது சற்றே விரக்தி அடைந்துள்ளனர்.
காரணம், நடிகர் குறித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் தான். இனிமேல் எங்கேயும் அவரை பார்க்க முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர் அவரது ரசிகர்கள்.
ஏற்கனவே, ரசிகர்களை தவிர்த்து வந்த அவர் இப்போது முற்றும் முழுதுமாக தவிர்க்கும் படி ஒரு விஷயத்தை அவர் செய்ததை அவரது ரசிகர்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
நடிகருக்கு வெற்றியோ, தோல்வியோ அவருடன் துணை நின்று தோள் கொடுப்பவர்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளங்கள் முதல் படம் ரிலீசின் போது ப்ளக்ஸ், பேனர் என அவரது ரசிகர்கள் கொடுக்கும் ஒப்பனிங்கை இன்று வரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.
சமீபத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் நடிகர் ஒருவரின் படத்துடன் தன் படத்தையும் ரிலீஸ் செய்தார் அந்த நடிகர். ஆனால், அவரது ரசிகர்கள் சூப்பர் நடிகரின் படத்தையே தூக்கி ஓரமாக வைத்து விட்டு இவரது படத்தை தமிழ் நாட்டில் முன்னிருத்தினர்.
உலகம் முழுதும் வசூலை வாரிய சூப்பர் நடிகரால் தமிழ்நாட்டில் அந்த நடிகரின் படத்தின் வசூலை முறியடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள்.
சூப்பர் நடிகருக்கு நிகராக எந்த நடிகராலும் நிற்க முடியாது என்ற எழுதப்படாத விதியை படம் ரிலீசான முதல் நாளே தட்டி தூக்கினார்கள். ஆனால், இந்த நடிகரோ இப்படியான ரசிகர்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
அவரின் இந்த போக்கு பல ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும். அவரது தீவிர பக்தர்கள் எங்களை மதிப்பதே கிடையாது. இனி அவரை எங்குமே பார்க்க முடியாதபடி செய்து விட்டார் என்ற விரக்தியில் உள்ளனர்.