தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐ.எம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் வரும் 5 அல்லது 6-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இதற்காக, மூன்று டீசர்களை கட் செய்து வைத்துள்ள படக்குழு அதனை நாளை சென்சாருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த டீசர் வீடியோவின் சென்சார் முடிந்ததும் நாளை மாலை டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது விஜய் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.